Saturday 16 November 2013

நிரந்தர வலி தரும் நிராகரிப்பு

ஒருவர் பெற்றவரால், சுற்றத்தால், உறவினரால், நண்பரால்,கணவன் மனைவியால், காதலன் காதலியால், பிள்ளைகளால், ஆசிரியர்களால், சக மாணவர்களால்,ஏன் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கூட நாம் நிராகரிக்கப்படலாம். மற்றவரால் நாம் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வேதனை, ஏமாற்றம், தவிப்பு என்பன எம்மை வாழ் நாள் பூராகவும் நினைவில் வந்து கொல்லும் வல்லமை கொண்டது.

சிலர் அவற்றை உடனே மறந்துவிட்டாலும் எப்பொழுதோ ஒருமுறை நினைவில் வந்து குதியாட்டம் போடுவதைத் தடுக்கவே முடியாது. சில நிராகரிப்புகள் காரணமின்றியே எம்முடன் கூடவே இருந்து தினமும் கொல்லும் தன்மை வாய்ந்தது. எம்மை எந்த வேலையும் செய்ய விடாது மனதை அழுத்தி எம்மை நோய்க்கு உட்படுத்தும். தூக்கம் தொலைக்க வழிவகுக்கும். இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment