காரிருளில் கத்தியின் மேல் நடக்கிறேன்
கனவுகள் சுமந்தபடி
கடவுளின் காட்சியைக் காண்பதாய்
காயங்கள் சுமந்தபடி
கண்ணிருந்தும் பார்வையின்றி
வாயிருந்தும் பேச்சின்றி
மரத்த மனதின் மடிப்புக்களை
மனதுள் எண்ணியபடி
எக்கணமும் நான் வெதும்பி
வீழ்ந்துவிடாதிருக்க
அத்தனை வாயில்களும்
திறந்தே இருக்கின்றன
ஆனாலும் அவாக் கொண்ட மனம்
அல்லல் கடந்தும்
அடையாளம் இட்டதுவாய்
அகலக்கால் வைத்தபடி
அரவமின்றி நெடுந்தூரம்
நடந்துகொண்டே இருக்கின்றது
முன் வினையின் விதியது
முடிச்சாகி இறுகித் தினம்
மூச்சளக்க வைத்தபடி
மனத்தின் குரங்கிடம்
மன்றாடவே செய்கின்றது
ஆயினும் தெரிந்தே நான்
விட்டில் பூச்சியின் வலிந்த
மரணத்தின் வீழ்ச்சியில் மெலிந்து
நிறுத்தமுடியாத் தூரம் வரை
நடந்துகொண்டே இருக்கிறேன்
14.10.16
நிவேதா
LikeShow More Reactions
CommentShare