பூனைகள் விசித்திரமானவை
என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன
நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை
பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள்
வீட்டுப் பூனைகளும் சரி
துரத்திவிடப்பட்டவைகளும் சரி
நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை.
பசி எடுக்கும் வேளைகளில்
அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன
பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட
அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன
அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு
என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு.
வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி
போதுமானதாக இருப்பதில்லையோ???
கட்டாக்காலி நாய்களைப்போல்தான்
பூனைகளும் இப்போ பெருகிவிட்டன
வேலியோ மதிலோ எங்கு ஏறிக் கடப்பதாயினும்
எல்லாமே அவற்றுக்குச் சாதகமாகவும் இலகுவாகவும் உள்ளன
ஆனால் இவற்றுக்கெல்லாம் மூலகாரணம்
தன் வீட்டு உணவு உருசியானது.
அதனாலேயே எல்லாப் பூனைகளும் என்னிடம் வருகின்றன என எண்ணி,
கத்தியபடி வரும் பூனைகளுக்கெல்லாம் உணவுபோடும் வீட்டுக்காரர்கள் தான்.
No comments:
Post a Comment