Sunday 21 April 2013

என்ன மாயம் நீ செய்தாய்

என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே
என்ன மாயம் நீ செய்தாய்
நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா
தமிழைத் தாயென்று போற்றுதனால்
உனையும் நான் பெண் என்பேன்

அழகிய பெண்ணே நீ
இத்தனைநாள் என்முன்னே
உன் முகம் காட்டாது
எங்கே மறைந்திருந்தாய்.

இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது
கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார்
உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால்

உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி
ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி
ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய்

திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச
தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு
தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு

உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால்
உலகில் பிறந்திட என்ன தவம் செய்தோமடி
உலகில் நாம் உள்ளவரை உன்னை மறவோமடி

No comments:

Post a Comment