Monday, 22 April 2013

நகைச்சுவை நாடகம்.

இளவரசி ஆரியகுளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார்.

தோழி:இளவரசி இளவரசி

இளவரசி:எதற்க்காக இடி விழுந்ததுபோல் கத்துகிறாய்.

தோழி:மரத்தின் பின்னால் இருந்து ஒருவன் எட்டி எட்டிப் பார்க்கிறான்.என்னசெய்ய?

இளவரசி:கல் ஒன்றை எடுத்து கண் பார்த்து வீசிவிடு.
பொறுபொறு. எனக்கும் பொழுது போகவில்லை. கூப்பிடு அவனை இங்கே.

தோழி: மரத்தின் பின் ஒளித்திருக்கும் மாங்கா, வாடா இங்கே

எல்லாளன் :நான் மன்னன்.என்னை வாடா போடா என்கிறாய்.

இளவரசி: எந்த நாட்டுக்கடா மன்னன் நீ.ஏதடா உன் நாடு.

எல்லாளன் : வன்னிக்கும் அங்கால வடிவான ஒருநாடு.

இளவரசி: உன்னாடே உனக்கு தெரியவில்லை.எப்படி நீ மன்னனாவாய்.

எல்லாளன்: அதுவந்து......

இளவரசி: எதுவந்து. சரி அதுதான் போகட்டும்.உன் பெயர் என்ன.
எல்லாளன்: எல்லாள மகாராஜா.

இளவரசி :எல்லாள மகாராஜாவா அந்த அனுராத புரத்தை ஆண்ட அந்த மன்னனா நீங்கள்.

எல்லாளன்: இல்லை இல்லை.என் அப்பாவுக்கு அவரைப் பிடிக்கும் அதனால் எனக்கும் அந்தப் பெயர்.

இளவரசி: தூத்தேறி, அந்த மாபெரும் வீரனின் பெயரை வைத்துக்கொண்டு மொள்ளமாரி வேலை செய்கின்றாய்.
உண்மையைச் சொல்.நாடகத்துக்குத்தானே உந்த வேடம்.

எல்லாளன்:சத்தியமாய் இளவரசி நான் மன்னன்.உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு உங்கள்மேல் மையல் கொண்டு ஓடி வந்துள்ளேன்.

இளவரசி: உனக்கு என்மேல் காதலா. உனக்கே இது அதிகமாகப் படவில்லையா.
அரைவாசிப் பல்லைக் காணவில்லை, அரைக் கிறுக்கன் போல் இருக்கிறாய்.உன்னைப் பார்த்தால்..........
அது என்ன இடுப்பிலிருந்து எடுப்பதும் வைப்பதுமாய்.கத்தி ஏதும் காட்டி எனைப் பயமுறுத்தப் பார்க்கிறாயா.

எல்லாளன்:இல்லை இல்லை.உங்களுக்காய் ஒன்று கொண்டுவந்தேன்.

இளவரசி: என்ன காதல்க் கடிதமா.

எல்லாளன் :சாம்சுங் கலக்சி.புத்தம் புதியது.

இளவரசி: என்னிடம் இதுபோல் நிறைய இருக்கிறது.

தோழி:இளவரசி காதைக் கொடுங்கள்.
இளவரசி:நீவேறு என்னடி.

தோழி:அந்த போனை வாங்கி என்னிடம் கொடுங்கள்.
அந்த மடையன் இப்ப நீங்கள் என்ன கேட்டாலும் தருவான்.

இளவரசி:சரி சரி தோழி! அந்த போனை வாங்கி நாம் பேசுவதை ரெக்கோட் பண்ணுகிறானா என்று பாரடி.

தோழி போனை வாங்கித் தன இடுப்பிழ்ச் செருகுகிறாள்.

எல்லாளன்: தேவி.அந்தக் கல்லில் இருந்து கதைப்போமா.

இளவரசி: வாயைத் திறக்காதே.. தேவியாம் மூதேவி. இருக்கும் நாலு பல்லும் இல்லாமல் போய்விடும்.
ஆரிய குளத்தில் ஆண்கள் வந்தால் என்ன தண்டனை தெரியுமா உனக்கு.

எல்லாளன் :தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்.உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன் கண்ணே.

இளவரசி :சுரணை கெட்டவனே.உனக்கு கொங்கு நாட்டின் குலவிளக்கு வேண்டுமோ? .
யாரங்கே.வந்து இவனைப் பிடியுங்கள்.

இளவரசி கைகளைத் தட்ட காவலர்கள் ஓடி வருகின்றனர்.

காவலர்:கூப்பிட்டீர்களா இளவரசி.

இளவரசி:இவனைக் கைது செய்து.

காவலர் :கொப்பரையில் போடுவதா.

இளவரசி: அந்தத் தண்டனை இவனுக்குப் பத்தாது.முத்தவெளியின்
மூத்திரக் குளத்தில் கொண்டுபோய் மூச்சு நிக்கும் வரை முக்கி எடுங்கள்.

எல்லாளன்: தேவி தேவி எனக்கு வேறு என்ன தண்டனை எதுவென்றாலும் கொடு.அந்தக் குளம் மட்டும் வேண்டாம்.

காவலர்: எங்கள் இளவரசியை தேவி என்கிறாயா.
காவலன் கன்னத்தில் அடித்த அடியில் இருந்த நாலு பல்லும் விழ அவர்கள் எல்லாளனை இழுத்துக்கொண்டு போகின்றனர்.

No comments:

Post a Comment