Sunday 21 April 2013

மனக் குரங்கு - அனுபவப் பகிர்வு

மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு சொன்னன். உடனே அவர் நீங்கள் என்னை அடித்தால்க் கூட எனக்கு உங்கள் மேல் கோபம் வராது என்று கூறியதில் எனக்கே பாவமாக் கிடந்தது.

அடுத்த வாரமும் அவரே எம்மைக் கூட்டிப் போவதாகச் சொன்னபோது ரெயின் ஓடுதுதானே நாங்கள் அதில போறம் என்று சொன்னேன். இந்த இருட்டுக்கை நாங்கள் தான் எல்லாருக்கும் பொறுப்பு கவனமா வீட்டை சேர்க்கவேணும் எண்டார் அவர். நான் என்ன குமர்ப் பெட்டையே எனக்குப் பயமில்லை என்றேன் நான். என் பிள்ள நீங்கள் இருக்கிற இடத்தில தானே அவரும் இருக்கிறவர்.போய் வாசல்ல இறங்கிறதுக்கு பிகு பண்ணுறியள் எண்டதோட நான் காரில் போகச் சம்மதித்தேன்.

எனக்குக் காரில அல்லது பஸ்சில பின்னால இருந்தால் தலை சுற்றும். அதனால அவற்றை கார்ல முனனால் போய் ஏறினான். எனது மகளும் இன்னொரு தாத்தாவும் பின் இருக்கையில். இரவு பத்தரை.விடியத்தொடங்கி ரிகேர்சல் பார்த்ததால் களைப்பு. சரி காரும் நல்லதுதான் என மனதுள் நினைத்தபடி வடிவாச் சாய்ந்து கண்களை மூடுகிறேன். ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும். இயக்கப் பாட்டுப் போட்டிருந்தவர் பக்கென்று நிண்டுது. என் காலில் உரசியபடி டாச்போட்டைத் திறந்தவுடன் நான் திடுக்கிட்டுப் போய் விளித்து என்ன அண்ணா என்றேன். cd தேடினனான் என்றார். சொல்லிப்போட்டுச் செய்யுங்கோ அண்ணா என்றுவிட்டு என் காலை காரின் இடப்பக்கமாக ஒட்டியபடி வைத்துக்கொண்டு இருந்தேன்.

எனது மகளும் ஐயாவும் நித்திரையாகி விட்டினம். இவர் போட்ட பாட்டு காதல்ப் பாட்டுகள் எனக்குச் சினமாக இருந்தாலும் என் அண்ணா இயக்கப் பாட்டு போடுங்கோவன் என்றேன். நீங்கள் ஒருத்தரும் கதைக்கிறியல் இல்லை இந்தப் பாடுகள் தான் நித்திரை தூங்காது எண்டு அவர் சொல்லவும் தூங்காத கண்ணென்று ஒன்று என்ற பாடல் தொடங்கிச்சுது. இது என்னடா கோதாரி எண்டு மனதுக்குள்ளை சொல்லிக்கொண்டு கண்ணை மூடிக் கிடந்தான். நல்ல பாட்டேல்லே சுகி என்று அவர் கேட்க ஓம் அண்ணா என்று அண்ணாவில் கொஞ்சம் அழுத்தம் குடுத்துச் சொன்னேன். அந்தப் பாட்டுமுடிய ஆயிரம் நிலவேவா.சுகி நல்ல பாட்டு கேக்கிறியளோ என்றார். ஓம் என்று ஒற்றைப் பதிலைச் சொல்லிவிட்டு பேசாமல் நித்திரைபோல் இருந்தேன். அடுத்தபாட்டு நாணமோ இன்னும் நாணமோ. அதுக்கு அவரும் சேர்ந்து படத் தொடங்கீட்டார். என்பக்கம் திரும்பி அவர் பாடுவது எனக்குத் தெரிகிறது. மூதேவி உன்னைப் பாத்து எனக்கேன் நாணம் என்று மனதுள் திட்டியபடி பேசாமல் இருக்கிறேன். அதுமுடிய உயிரே உயிரே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு எண்ட பாட்டு. எனக்கு அந்தப் பாட்டு நல்லாப் பிடிக்கும். மனதுள் பாட்டை இரசிக்க நினைத்த உடனேயே கர்ண கடூரக் குரலில் அவர் தானும் சேர்ந்து பாட வெளிக்கிட்டுட்டார். எனக்கு வந்த கோவத்துக்கு அண்ணா நித்திரை வாறநேரம் அந்தப் பாட்டையே கேட்க முடியேல்ல அதுக்குள்ளே நீங்கள் வேற. நிப்பாட்டுங்கோ அண்ணா பாட்டை என்று நான் கொஞ்சம் உறுக்கியே சொல்லிப் போட்டன்போல. அதோட cd உம் நிண்டிட்டுது.அவற்றை பாட்டும் நிண்டிட்டிது.

No comments:

Post a Comment