தமிழ் பெண்ணே நீ
தாழ்ந்தது போதுமடி
தலை நிமிர்ந்தே நீ
வாழ்ந்திட வேண்டுமடி
தாரத்தைத் தாயாய்
எண்ணிய மண்ணில்
தரையில் புழுவாய் நீ
தவள்வதும் ஏனோ
பெண்ணின் பெருமை பேசி
அடிமை ஆக்கிட்டார்
பேதைமை கொண்டே நாம்
பேச்சற்றிருந்துவிட்டோம்
பேரினவாதம் பேதைகளை
பேச்சற்று மூச்சறுக்க
பேடிகள் போல் இன்னும்
பயந்து ஒளியலாமோ
உன்னைத் தொடுபவனை
உக்கிரமாய் எதிர்த்திடடி
உடலைத் தொடுபவனை
ஊசி கொண்டு கிழித்திடடி
பின்வாசல் வருபவனை
பிணமாய் அனுப்பிவிடு
முன்வாசல் வருபவனை
மூக்கறுத்து அனுப்பிவிடு
மோகத்தில் வருபவனை
மோதியே கொன்றுவிடு
மூடர்கள் வந்தால்
முட்டி நீயும் கொன்றுவிடு
காமுகன் வந்தால்
காதை நீ அறுத்துவிடு
சேர்ந்து வருவோரின்
சங்கை நீ அறுத்துவிடு
கைகள் இரண்டை
கடவுள் தந்துள்ளான்
காரிகையே நீயும்
கலங்கித் தவிக்காதே
உயிர் போகும் ஒருமுறை
அதை எண்ணி அஞ்சாதே
உத்தமியாய் வாளும்
உன் உரிமைதனை
எத்தர்களுக்காய் நீ
எப்போதும் ஈயாதே
என்னை நான் நீயாக
எண்ணிக் கலங்கியதால்
இத்தனையும் எழுதிவிட்டேன்
ஈழப் பெண்ணே
இயலுமாய் எண்ணி
இனிமேலும் எதிர்த்திட்டால்
எத்தன் ஒருவனும்
உனை எட்டியும் பார்த்திடான்
No comments:
Post a Comment