தமிழன் என்று  சொல்லித் தலை நிமிர்ந்தென்ன
தரணி முழுவதும் பரந்திருந்தென்ன
தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே
பரணி பாடிப் பகை முடித்தென்ன
போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன
பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே
அடிமை விலங்கை அறுத்திட எண்ணி
அத்தனை வீரரும் ஆகுதியாயினர்
சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து
சூளுரைதே  சூழ்பகை வெல்ல
தேசம் காக்க தம்மை ஈந்தனர்
எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள்
நித்தமும் தம்மை நெக்குருக்கியே
நேசத்துடன்  தம் தேசம் காத்திட
நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர்
தற்க்கொடையாளராய்  தம்மை ஈந்து
தரணியில் தமக்கெனத்  தடம் பதித்திட 
கடற் புலிகளாய் கரும்புலிகளாய்
காரிருளிலும்  காவியம் படைத்தனர்
எத்தனை ஆண்டுகள் ஏக்கத்துடன்  காத்திருந்தோம் 
எத்தனை எத்தனை ஈகைகள் செய்திருந்தோம்  
அத்தனையும்  எத்தர்களால் அநியாயமானதுவே  
ஓட்டுமொத்தமாய் எம்மினம் ஒழிந்துபோனதுவே
ஏன்  இப்படி ஆனது எம்  தேசம் யார் தந்தது இப்படிச் சாபம்
ஒற்றுமை இல்லாத்  தமிழனால் ஒன்று படாத் தமிழனால்
அத்தனையும் அழிந்ததே அத்தனையும் அழிந்ததே
தமிழன் என்று சொல்லி நாம் தலை குனிந்து கொள்ளுவோம்
தரணி எங்கும் உள்ள நாம் தலை குனிந்து கொள்ளுவோம் 
     
     
 
No comments:
Post a Comment