Friday 13 June 2014

முடிவுறாப்பயணம் - கவிதை


கால் கடுக்க நடந்து வந்தும்
கடுகளவும் முடிவுறாப் பயணத்தின்
முடிவு காணா வெற்றிடங்களில்
வினாக்கள் இன்றும் மிச்சமிருக்கின்றன

உயிர்ப்பற்ற உறவுகளின்
ஊழ்வினைகள் கொல்லும் நிலை
உருக்குலையா வாழ்விலும்
ஓரங்களில் ஒட்டியபடி இன்றும்

மகிழ்ந்தாடும் மனதின் மாடி அறைகளில்
மறைப்பதற்கு ஏதுமற்ற மனதோடு
மகுடியின் ஊதல்கள் கலந்து
மயக்கும் வரை கேட்கின்றன

கிழித்த கோடுகளின் எல்லையில்
கிடந்தது அல்லாடும் தடைகள் தாண்டி
கேடயமற்ற போர் வீரனின்
படிமமற்ற எதிர்த்தலிநூடே
பயணிக்கின்றது வாழ்வு

இறுதி மூச்சின் எண்ணங்கள்
எங்குமாக இருக்கப் போகின்றன
எட்டும்வரை முயல்வதாயும்
எட்டாவிடில் விடியலே அற்ற
இரவுகளின் எதிர்பார்ப்புக்களுடன்
தொடரும் வாழ்வின் வசந்தமாய்

2 comments:

  1. வணக்கம்
    படிக்க படிக்க திகட்டாத கவிதை.அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றி ரூபன் வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete