Saturday, 16 November 2013

நானும் வீழ்ந்தேன்

என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது
வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப்
பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம்.
கவிதை புதிது. :D


கற்பனையில் எண்ணியவை
உன்னிடம் கண்டதனால்
காதல் கொண்டேனடா
காலமெல்லாம் காத்திருந்து
உன்னைக் கண்டேனடா

கண்ணிமை மூடினும்
என்முன்னே நின்று
காதல் செய்கிறாய்
காதினிக்க  வந்து
காதல் மொழி பேசுகிறாய்

கயவனே உன்னைக்
காணாதிருந்திருந்தால்
காலமெல்லாம் நான்
கற்பனையில் வாழ்ந்திருப்பேன்

கண்டதனால்
நிதம் என் உயிர் துடிக்க
நினைவு நிதம் வதைக்க
நேர காலம் தெரியாது
நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன்
உணர்வாயா ?????????

No comments:

Post a Comment