கண்டதும் காதல் கொண்டு
கொண்டது கோலம் என்று
கோதையர் மேல் காதல் கொண்டால்
காயும் நிலைதான் காளையர்க்கு
கொடியிடை வேண்டுமென்றும்
கொள்ளை அழகு வேண்டுமென்றும்
குருடராகிக் குனிந்து நின்றால்
கோட்டான் கூட உமைக் குதறிடும்
நல்லதும் கெட்டதும் நாலுவிதம்
நம்மெதிரே உள்ளவைதான்
நகல் நிகர்த்து நல்லது காண்
நன்மை நீயும் பெற்றிடுவாய்
கண் காணும் கவர்வின்றி உண்மைக்
காதல் தான் வேண்டுமென்றால்
கால்களில் வீழாது காதல் செய்வீர்
கம்பீரமாய் நின்று காதல் செய்வீர்
உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர்
உத்தமி ஒருத்தி வந்திடுவாள்
உண்மைக் காதல் தந்திடுவாள்
உம்மை உய்யவும் வைத்திடுவாள்
உணர்ந்து காதல் செய்திடுவீர்
உண்மை அன்பைப் பெற்றிடுவீர்
உன்மத்தராய் ஆகாமல்
உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்
No comments:
Post a Comment