Saturday, 16 November 2013

வாங்கு யாருக்கு ?????

நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது நான்காம் வகுப்பு என்று நினைக்கிறேன், எங்கள் வகுப்பில் பதினைந்து பெண்களும் பதினைந்து ஆண்களும் படித்தோம். ஆண்கள் ஒருவாங்கில் இருந்தால் பெண்கள் இன்னொரு வாங்கில் இருப்போம். முன்னுக்குப் பின்னாக ஐந்து வாங்கு மேசையும், இரு பக்கங்களில் ஒவ்வொரு மேசையும் வாங்கும் இருக்கும். முதலில் யார் வந்து இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன் மேசை.

அதில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. பெண்களில் என்னுடன் சேர்ந்து ஒரு ஆறு பெண்களும் ஆண்களிலும் அதேபோல் ஆறு குரங்குகளும் எப்போதும் முன்வாங்குக்குச் சண்டை. நாம் மூன்று பேர் வந்து இருந்தால் அவங்கள் நாலுபேர் எங்களை இடித்துவிட்டு இருந்திடுவாங்கள். ஒரு மாதமா இப்பிடியே தொடர எங்கள் எல்லோருக்கும் கடுப்பு. வாத்தியாரிட்டை சொன்னால் உடனேயே மாத்தி விடுவார்தான். ஆனாலும் அப்படிச் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை.

எல்லாரும் யோசிச்சு ஒரு முடிவெடுத்தம். பெடியளைக் கூப்பிட்டு நாங்கள் ஒரு போட்டி வைப்பம். யார் வெல்லுகிறார்களோ அவர்களே நிரந்தரமாக முன் வாங்கில் அமர்வது என்று.

போட்டி என்னவெனில் நான்கு பெடியளும் நான்கு பெட்டைகளும் வாங்கில் இருக்க  வேண்டும். ஒரு நடுவர் விசில் ஊதியவுடன் இடித்துத் தள்ளவேண்டும். இடித்துத் தள்ளிவிட்டு யார் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாங்கு.

பெடியளும் இத்தனைநாள் செய்
வேலையால தாங்கள் எங்களைக் கலைச்சுப் போடலாம் எண்டு சந்தோசமாத் தலையாட்டிச்சினம். நானும் மூண்டுபேரும் பெண்கள் பக்கம், நாலு பெடியள் மற்றப்பக்கம். எங்களுக்கு நெஞ்சு படபடப்பு ஒராளின்ர ற்றாளுக்குக் கேட்டுது. எடியே விட்டிடாதேங்கோடி என்று அவர்கள் காதுக்குள் குசுகுசுத்தேன்.

விசில் அடிச்சதுதான் அவங்கள் இடிச்ச இடியில வாங்கின்ர நுனிக்கு வந்தாச்சு. மேசையைக் கையால இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு திரும்ப ஒரு ஒரு மூர்க்கத்தோட தள்ளிக்கொண்டே
அவங்கள் நாலுபேரையும் கீழை விழுத்திப் போட்டம். அதுக்குப் பிறகு பள்ளிவிட்டுப் போகும்வரைக்கும் முன்வாங்கு எங்களுக்குத்தான்.   

No comments:

Post a Comment