என் கணவரின் நண்பர் ஒருவர் கடந்த வாரம் ஈழத்துக்குச் சென்று வந்திருந்தார். அவர்கள் குடும்பம் எங்கு சென்றாலும் எமக்கும் ஏதாவது ஒன்றை வாங்கிவருவார்கள். நாமும் எதையாவது வாங்கிக் கொண்டுவந்து கொடுப்போம். இம்முறை அவர் வாங்கிக் கொண்டு வந்த பொருட்களில் மேலே இருப்பவையும் அடங்கும்.
அவர்கள் வீட்டுக்கு வந்து சென்றபின் அவர்கள் என்ன கொண்டுவந்தார்கள் என்னும் ஆர்வம் உந்தப் பையைத் திறந்த எனக்கு மிகுந்த மகிழ்வாகப் போய் விட்டது.ஏனெனில் இவை இரண்டையும் சிறுவயதில் கோவில் திருவிழாக்களில் உண்ட நினைவு வந்து பழையதை நினைத்து எங்க வைத்துவிட்டது.
2003 இல் நாம் ஈழத்துக்குச் சென்றிருந்தபோது கூட நான் இவற்றைக் காணவில்லை. இத்தனை தூரத்துக்கு அதைக் காவிவந்து எமக்கும் அதைப் பகிர்ந்தமை என் மனதை குதூகலம் கொள்ள வைத்துவிட்டது. அப்பளம் முழுதாக வராவிட்டாலும் உண்ணும்போது மனதில் ஒரு சொல்லொனாத் திருப்தி பரவியது. நல்ல காலம் சாப்பிட்டு முடியும் நேரம்தான் யாழில் போட வேண்டும் என்னும் எண்ணம் உந்த போனில் படம் பிடித்தேன்.
உங்களுக்கு இதை உண்ட நினைவு வருகிறதா????
No comments:
Post a Comment