எனக்கு பூக்கள் தாவரங்கள் என்றால் பிடிக்கும் என்று முன்பே உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன். இலைதளிர் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை என் சிறிய
தோட்டத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கும் செடிகளை இரசித்தபடி இருப்பது,
யாழுக்கு வருமுன் வரை என் பொழுதுபோக்கு.
ம்....... இப்ப கொஞ்ச நாட்களாக நான் என் தோட்டத்தையும், தோட்டத்தில் உள்ள
சிறிய மீன் வளர்க்கும் குளத்தையும் கவனிக்காது விட்டதில் அவை அழகு குன்றி
விட்டிருந்தன. சரி பூங்கன்றுகள் இப்போதுதான் தளிர்க்கின்றன.
குளத்தையாவது சுத்தம் செய்தால் மீன்கள் சுதந்திரமாக ஓடித்திரியுமே என
எண்ணியபடி இன்று சுத்தம் செய்தேன். இரண்டே இரண்டு அல்லிகள் தான் இரு
வருடங்களின் முன் வைத்திருந்தேன். அவை எட்டாகப் பெருகி அடிமுழுவதும் வேரோடி
இடத்தை அடைத்துக் கொண்டிருந்ததால், அனைத்தையும் வெளியே எடுத்து துப்பரவு
செய்ய நான்கு மணி நேரம் ஆனது.
சரி நான் மட்டும் இரசிக்கும் என் தோட்டத்தை ஆர்வமுள்ள உறவுகளும் வந்து
பார்த்து மகிழட்டுமே என்று உங்களுக்கும் என் தோட்டத்தின் படங்கள்.
No comments:
Post a Comment