Saturday 16 November 2013

தொப்பி யாருடையது ???

ஈழம் என் உயிர் என்பார்
தடைகள் உடைத்து தலைவன் வழியில்
ஈழம் காண்போம் என்பார்

வீர வசனம் பேசித் தம்மை
விசுவாசி என்றும் கூறி
வீணே காலத்தைக் கழிக்கின்றார்

உணவின்றி மக்கள் உழல்கையில்
உள்ளம் இரங்கார் ஒருபிடி
உணவும் கூட உண்மையில் கொடார்

கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு
காப்பாற்றுவார் போல் மாற்றார் முன்
கதறித் துடித்து நாடகமும் ஆடுவார்

தன்னைத்த் தானே பீற்றித்
தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து
தானே தன்மானத் தமிழன்
என்றுவேறு எக்காளமிடுவார்

வார்த்தைகளில் வண்ணம் வைத்து
வருவோரை மயக்கி
வக்கணையாய்ப் பேசி வலைவீசி
வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார்

இத்தனை கேடு கேட்ட தமிழனை
தெரிந்தும் போற்றுவோர்
மனிதம் தெரியாத மூடர்களே
உணர்ந்தும்  உறவு கொள்வோர்
உலகறியா மூடர்கள்

உத்தமத் தமிழன் என்றும்
ஊனனாய் உளறுவதில்லை
ஊமையாய் நின்று உலகளவு
உதவிகள் ஊருக்குச் செய்வான்
குருடனாய் நின்று  குடிகளுக்கெல்லாம்
கோடி நன்மை கூடிச் செய்வான்

ஆகையால் மூடத் தமிழா - இனியாகிலும்
மௌனம் காத்து மமதை தொலைத்து
மண்ணின் விடிவுக்கு நன்மை செய்திடு
பேசாதிருப்பவன் ஊமையுமல்ல
பார்க்காதிருப்பவன் குருடனும் அல்ல
அமைதியாய் இருந்து  செய்திடுவான்

அனைத்தும் தெரிந்த அறத்த தமிழன் 

கொண்ட கொள்கையில் மாறாதவர்
தேசத்தில் உண்மை நேசம் கொண்டவர்
இன்னும் இருக்கிறார் உலகெங்கும்

ஆகவே கொள்கைகள் அற்று நீ
கொக்கரித்து போதும்
உண்மையாய் இரு உனக்கு
உண்மையாய் இரு மற்றவர்க்கு
உண்மையாயிரு உலகுக்கு
தானாய் நடக்கும் அத்தனையும்


 

No comments:

Post a Comment